ஜகார்த்தா, செப் 5-
2024 ஆம் ஆண்டுக்கான இந்தோனேசியா அறிவியல் புத்தாக்க விழாவில் செமினி தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் 2 தங்கம் 2 வெள்ளி சிறந்த படைப்புக்கான விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர் என்று பள்ளியின் தலைமையாசிரியர் கு. நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற
2024 ஆம் ஆண்டுக்கான புத்தாக்க அறிவியல் போட்டியில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி அனைத்து உலக ரீதியில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர்.
அனைத்துலக ரீதியிலான போட்டியில் மாணவர்கள் சிறப்பான முறையில் வெற்றிபெற பயிற்றுவித்த இப் பள்ளியின் ஆசிரியை திருமதி ஷாமினி, திருமதி உமாதேவி, திருமதி தமிழரசி, திருமதி வினோதினி, திரு விஜயன் இந்த போட்டிக்கான பொறுப்பாசிரியர்களாக மற்றும் மாணவர்கள் ஜெகன் ரூபன், கார்த்திகேயன், தர்ஷிகா, சிதேஷ், கிஷோர், முகேஷ், சன்மித்தா, வேதா ஸ்ரீ, தாமிரா, லக்ஷன், ஈஸ்வரன், லோகேன் ராஜ் ஆகியோர் செமினி தமிழ்ப் பள்ளியின் சார்பில் பங்கேற்று பள்ளியின் நற்பெயரை சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.