விளாடிவோஸ்டோக்: செப் 5-
மானியக் குறைப்புகளுக்கு மாற்றாக அரசாங்கம் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஒருபோதும் விவாதிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
தற்போது அரசாங்கம் வரவுச் செலவு திட்டங்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்களிலிலும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளிலிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அரசாங்கம் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை மீண்டும் அமல்படுத்தவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் போலியானது என்றார் அவர்.
இது போன்ற போலி தகவல்களில் கவனம் செலுத்துனால் நாட்டை ஆள முடியாது என்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.