
சுங்கைபட்டாணி செப் 6- கெடா மாநில தைப்பூசக் கொண்டாட்டம் மற்றும் திருவிழாக்காலங்களில் தனது சேவையினையும் பாதுக்காப்பினையும் வழங்கி அவ்விழாவினை நல்வழிப்படுத்தி தனித்துவம் பெற்றுத் திகழும் கெடா மாநில இந்து சமயப் பணிப்படையின்(தாஸ் ஃபோஸ்) 12ஆம் நிறைவுக் கொண்டாட்டம் இங்குள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்றது.
கடந்தக் காலங்களில் தங்களது நடவடிக்கைகளில் நிகழ்ந்த சிறு சிறு தவறுகள் மற்றும் மேலும் திருவிழாக்காலங்களில் பக்தர்களுக்கு சிறப்புற பாதுக்காப்பு வழங்குவது குறித்தும் ,ஆலயம் ,காவல் துறை மற்றும் நகராண்மைக்கழகத்துடன் ஒத்தழைப்போடு இந்து பணிப்படையின் சேவையினை இன்னும் சிறப்புற அமையப்பெற இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
ஏராளமான இளைஞர்கள் தங்களோடு இணைத்து இன்னும் திறம்பட செயல்பட அவர்களை மலேசிய இந்து சமய பணிப்படை வரவேற்பதாகவும் அதற்கான திட்டங்களும் வகுத்து வருவதாக அதன் மாநில ஒருங்கிணைப்புத் பி.மாணிக்கவாசகம் கூறினார்.
அதோடு தங்களுக்கு அனைத்து வகையிலும் நல் உதவிகளை முன் நின்று உதவிய முத்தையாஸ் கேஸ் என் கேரி நிறுவனத்திற்கும்,இந்து சமய பணிப்படையின் ஸ்தாபகர் சுவாமி எஸ்.இராமஜிக்கும்தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
தனது துணைத்தலைவர் சங்கரலிங்கம் இராசாமி,செயலாளர் ஆசிரியர் முருகையா மற்றும் தங்களுக்கு தூணாக திகழும் அதன் உறுப்பினர்களுக்கும் மாணிக்கவாசகம் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்து சமயப் பணிப்படையின் அளப்பறிய சேவையினால் கடந்த 12 வருடங்களாக சுங்கைபட்டாணி தைப்பூசத்தில் அதன் குற்றவியல் சமபவங்கள் சுத்தமாக துடைத்தொழித்திருப்பது குறித்து கோலமூடா மாவட்ட காவல் நிலையம் தொடர்ந்து புகழாரம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.