மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ்தந்தை, தாய் , மகன் மீது குற்றச்சாட்டு! செப் 11 இல் தீர்ப்பு

ஈப்போ செப் 6-
போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கப்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டை தந்தை, தாய் , மகன் ஆகியோர் எதிர் நோக்கி உள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு வரும் 11 ஆம் தேதிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

கடந்ந நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிம்மோரில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் வைத்திருந்ததாக இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கான இரு தரப்பு வாதங்களை செவிமடுத்த நீதிபதி மோசஸ் சூசையன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை இம்மாதம் 11- ஆம் தேதி விதிப்பதாக அறிவித்தார்

இந்த வழக்கில் கே.ஏகாம்பரம் ( வயது 57), இவரது மனைவி முத்துபால் லத்தா( வயது 55 ), இவர்களின் மகன் ஏ. லோகேஸ்வரன்( வயது 28 ) ஆகிய மூவரும் போதைப்பொருள் குற்றவியல பிரிவு 39 பி பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 18-2-20 இல் காலை மணி 4.30 மணியளவில் ஜாலான் மங்கிஸ் , சிம்மோர் , பேராக எனும் முகவரியில் உள்ள வீட்டில் 303.4 கிராம் எடையுள்ள பெத்தமின் எனும் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதத் தொகுப்பு நிறைவு பெற்றது.

அரசு தரப்பில் டி. பி. பி. ஆர். புஷ்பராசி ஆஜராகி உள்ள வேளையில், குற்றம் சாட்டபட்டவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் சிரன்சிங். மோகன் மற்றும் பரிஹா அர்ஷாட் ஆகியோர் வாதாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles