செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் : செப் 7-
இன்று நாடு தழுவிய அளவில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
தலைநகர்
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இரு தினங்களாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து விநாயக பெருமானை தரிசனம் செய்தனர்.
விநாயகப் பெருமானுக்கு முதன்மை விழாவான விநாயர் சதூர்த்தி விழா வால் ஆலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அவ்வகையில் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று இரவு தங்க ரதத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் தொடர்ந்து ஆலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
இதனிடையே கோர்ட்டுமலை விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக கிள்ளானை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் சுவையான அன்னதானம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து
10ஆவது ஆண்டாக 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.