பரா ஒலிம்பிக்கில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்று சாதனையை படைத்தார் மலேசியாவின் பளுதூக்கும் வீரர் போனி!

பாரிஸ், செப் 7-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவின் பளுதூக்கும் வீரர் Bonnie Bunyau Gustin புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சரவாக்கைச் சேர்ந்த 25 வயதான போனி 72 கிலோவுக்கு குறைவான ஆண்களுக்கான போட்டியில் மொத்தம் 232 கிலோ எடையைத் தூக்கி தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார்.

வெள்ளிப் பதக்கத்தைச் சீன வீரர் ஹூ பெங் வென்ற நிலையில் மூன்றாவது பதக்கம் இத்தாலி வீரரான Donato Telesca-க்குச் சொந்தமானது.

கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயில் நடந்த உலக பழு தூக்கும் போட்டியில் போனி 231 கிலோ எடை தூக்கி உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரை பாரிஸ் பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 38-ஆவது இடத்தில் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles