பாரிஸ், செப்7- பாரா ஒலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் 6 தங்கம் உள்பட மொத்தம் 26 பதக்கங்களை இந்தியா இதுவரை வென்றுள்ளது.
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T64) இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனை படைத்தார்.
அவரது இந்த உயரத்தை முறியடிக்க அமெரிக்க வீரர் டெரேக் லோசிடென்ட் முயன்றார். ஆனால், 2.06 மீட்டர் உயரம் தாண்டி அவர் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
2.03 மீட்டர் உயரம் தாண்டி உஸ்பெகிஸ்தான் வீரர் 3ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.