கோலாலம்பூர்: செப் 7-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் புதையுண்ட இந்திய பிரஜை விஜயலட்சுமி குடும்பத்தாருக்கு 30,000 ரிங்கிட் உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்று
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.
விஜயலட்சுமியை இழந்து நாடு திரும்பிய அவரின் குடும்பத்தாருக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் சார்பில் 30 ஆயிரம் வெள்ளி உதவி நிதி வழங்கபட்டது.
மீட்பு பணியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்த பின்னர் அவரின் குடும்பத்தார் நாடு திரும்பும் போது இந்நிதி வழங்கப்பட்டது.
இந்த 30,000 ரிங்கிட் இழப்பீட்டு நிதி அல்ல. உதவி நிதி. கோலாலம்பூர் மாநகர் மன்றம் இந்த நிதியை வழங்கியது.
அதே வேளையில் விஜயலட்சுமி குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அடுத்த அமைச்சரை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நில அமிழ்வு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.