மம்பாவ், செப் 7-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் பழமையான சிரம்பான், மம்பாவ் ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 1/2 ஏக்கர் நிலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தால் இந்த ஆலயத்திற்கு நிலப்பட்டா (gazette) வழங்குவதற்கு மாநில ஆட்சிக்குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் தெரிவித்தார்.
நேற்று மம்பாவ் ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த அருள்குமார் இந்த இனிப்பான செய்தியை ஆலய நிர்வாகத்திடம் முறைப்படி தெரிவித்தார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் Yap YewWeng , நெகிரி மாநில இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான ஆட்சி குழு உறுப்பினர் தியோ கோக் சியோங், காளிதாசன் உட்பட பலரும் சிறப்பு வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆலயத்திற்கு அரை ஏக்கர் நிலப்பட்டா வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கிய நெகிரி மாநில அரசுக்கு ஆலய நிர்வாகம் மனமார்ந்த நன்றியை பதிவு செய்தது.