திடல் தடப்போட்டியில் சாதனையை முறியடித்த இரு இந்திய மாணவிகள் !

ஈப்போ செப் 7-
ஈப்போவில் நடைபெற்ற 64 ஆவது மாவட்ட நிலையிலான பள்ளிகளுக்கான திடல் தடப்போட்டியில் மாநில சாதனையை முறியடித்த 12 மற்றும் 15 வயதுடைய இரு இந்திய மாணவிகள் மாநில நிலையிலான வீரங்கனைகளுக்கான விருதை வென்றனர் .

இப்போட்டியில் ஈப்போ பெண்கள் ஆரம்ப பள்ளியில் ஆறாம் வகுப்பு 12 வயது மாணவியான
ஜனீதா விஜிய ராஜன் நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்ற சாதனையை முறியடித்துள்ளார்

அவர் பங்கேற்ற 1) 100 மீட்டர் (தங்கம்) 13.84 புதிய சாதனை.

2) 200 மீட்டர் (தங்கம்) 28.48 புதிய சாதனை.

3) 4x 100 மீட்டர் (தங்கம்) 54.88 புதிய விளையாட்டு சாதனை.

4) 4x 200 மீட்டர் (தங்கம்) 2.00.34. புதிய சாதனையை புரிந்துள்ளார்

இப்போட்டியில் தெலுக் இந்தான்.ஸ்ரீ காந்தி இடை நிலைப்பள்ளியைச் சேர்ந்த 15 வயதுடைய மகாலெட்சுமி லெட்சுமணன் எனும் மாணவி மூன்று தங்க பதக்கத்தை வென்று சிறந்த வீரங்கனைக்கான விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனையை புரிந்துள்ளார் இவர் எடுத்துக்கொண்ட நேரம் ,2.33.00 .

.1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனையை பதிவு செய்துள்ளார் . அதில் அவர் எடுத்துக்கொண்ட நேரம் , 5.27.07 . மேலும் 2000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார் மற்றும் 4×400 மீட்டர் ஒட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்..

இதனிடையே இம்பெரியல் அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த 12 வயது மாணவி டானியா சரளநாதன்
4 x100 மீட்டர் மற்றும் 4 x 200 மீட்டர் ஆகிய இரு ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்கள் இங்குள்ள மாநில விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் 12ட மாவட்டங்களிலிருந்து பள்ளிகள் இடம் பெற்றன.

இப்போட்டியை மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் கைருடின் அபு ஹானிப்பா விளையாட்டுப் போட்டியை நிறைவு செய்து வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இப்போட்டியில மாணவர்களின் திறனைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது .

இந்த திறனை தொடர்ந்து மேம்படுத்தி அடுத்து நடைபெறவிருக்கும் சக்தி மற்றும் இதர நிலை போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்று பேரா மாநிலத்திற்கு் பெருமை சேரக்கவேண்டும் என்று தமது உரையில் கைருடின் வலியுறுத்தினார்.

அடுத்து இவ்வாண்டு அக்டோபர் மாதம் பேராவில் நடைபெறவிருக்கும் தேசிய நிலையில் பள்ளிகளுக்கிடையிலான திடல் தடப்போட்டி நடைபெற உள்ளது. அதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles