ஷா ஆலம், செப் 8: யாயாசான் டெலிகோம் மலேசியாவுடன் இணைந்து முழுநேர இளங்கலை பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பியூச்சர் லீடர்ஸ் நிதி உதவியை யாயாசான் சிலாங்கூர் வழங்குகிறது.
இந்த சலுகை குறிப்பாக பொது பல்கலைக்கழகங்கள், சிலாங்கூர் பல்கலைக்கழகம், சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் மல்டிமீடியா பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என யாயா சான் சிலாங்கூர் தெரிவித்தது.
யாயாசான் சிலாங்கூர் 2024 உடன் இணைந்து யாயாசான் டெலிகோம் மலேசியாவின் ஃபியூச்சர் லீடர்ஸ் நிதி உதவி இப்போது திறக்கப் பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆகும் ,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான நிபந்தனைகள் 25 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், குடிமக்கள் மற்றும் எந்த ஒரு தரப்பினரிடமிருந்தும் , வேறு நிதி உதவியும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் என்ற தகுதிகள் வேண்டும்.