
சென்னை, செப் 8 –
தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே.
எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம்.
இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது என்று அவர் சொன்னார்.