காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், செப்.8-
மஇகாவினர் பதவியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பதும், குரல் கொடுப்பதும் மஇகா என்பதை அனுபவப்பூர்வமாக மக்கள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
ஆகையால் நமது ஆதரவை பெருக்கிக் கொள்ளவும் கட்சியை வலுப்படுத்தவும் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவினர் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று கோலாலம்பூர் ஸ்ரீ பசிபிக் தங்கு விடுதி மண்டபத்தில் நடைபெற்ற மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில் மஇகாவை வழிநடத்துவது இன்றைய இளைஞர் பிரிவினரும் மகளிரும்தான். ஆகையால் அவர்க
ள் சரியான பாதையில் செல்ல வேண்டும். இந்த இரு பிரிவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் சமுதாய பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட மஇகா பிரநிதிகள் அவர்களின் தொகுதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரை நாட வேண்டும்.
மக்களுக்கு சேவையாற்றதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கும் நாம் அழுத்தம் தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்