ஈப்போ,செப்08: பேரா மாநில ஜசெகவின் துணைத்தலைவராக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் மீண்டும் தேர்வானார்.
அவரைப் போலவே நடப்பு உதவித் தலைவரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் மீண்டும் உதவித் தலைவராக போட்டியின்றி தேர்வானார்.
இம்முறை பேரா மாநில ஜசெகவில் தேர்தல் நடைபெறாத காரணத்தால் சிவகுமார்,சிவநேசன் உட்பட பலரும் தங்களுக்கான பதவிகளை தற்காத்து கொண்டனர்.
அவர்களை போலவே மீண்டும் மாநிலத் தலைவராக ஙா கோர் மிங் தேர்வான நிலையில் துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ மீண்டும் செயலாளராக தேர்வானார்.
முன்னதாக இம்முறை மாநில கட்சி தேர்தலில் 19 பேர் போடியிட மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நால்வர் தங்களின் வேட்புமனுவை மீட்டுக் கொண்டதால் நடப்பு நிர்வாகம் போட்டியின்றி தேர்கு செய்யப்பட்டனர்.
பேரா மாநில ஜசெக வரலாற்றில் தேர்ல் இல்லாமல் போனது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.