ரவாங்கில் விமரிசையாக நடைபெற்ற மலேசிய தின கொண்டாட்டத்தில்300 பேர் கலந்து சிறப்பித்தனர்!

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங், செப் 9-
மலேசிய தினத்தை கொண்டாடும் விதமாக ரவாங் கவுன்சிலர் எலிஸ் சூ மற்றும் செயாலாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் ஒன்று கூடி மிகப்பெரிய அளவில் விழாவை சிறப்பாக நடத்தினர்.

ஒற்றுமை என்ற கருப்பொருளோடு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக கவுன்சிலர் எலிஸ் கூறினார்.

இதன் அடிப்படையில் நம் நாட்டின் உணவுகளும் இங்கு பரிமாறப் பட்டது என்றும் அவர் சொன்னார்.

மேலும் இனமாக வேறாக இருந்தாலும் நம்மிடையே ஒரு சில உணவு வகைகளில் அதிக ஒற்றுமை காணப்படுவது தமக்கு மகிழ்ச்சியை தருவதாகவும் எலிஸ் தெரிவித்தார்.

மலேசியா தின விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கும் பொது மக்களுக்கும் நமது நாட்டின் அனைத்து இனத்தவரின் பலவகை சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன.

விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டிகளும் இடம் பெற்றன.

ரவாங் வாட்டாரத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் மலேசியா தின விழாவில் கலந்து சிறப்பித்தனர். அனத்து இன மக்களும் இந்நிகழ்ச்சியில் ஒற்றுமை உணர்வோடு கலந்து கொண்டது மேலும் சிறப்பு அம்சமாக கருதுவதாக புவான் எலிஸ் சூ கூறினார்.

மேலும் நிகழ்ச்சியை சிறப்பாக்க செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வில்லியம் லியோங், ரவாங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுவா வெய் கியாட், பலாகோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு Wayne Long, செலாயாங் நகராண்மைக் கழகம் செயலகத்திலிருந்து துவான் மஜித், மற்றும் செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ரவாங் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பி.சுவா தனது உரையில் இது போன்ற ஒரு விழாவை நடத்துவதில் மக்களிடையே ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்க முடிகிறது என சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த கவுன்சிலர் எலிஸ் சூ மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகளையும் நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles