மா.பவளச்செல்வன்
பலாக்கோங்: செப் 9-
நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து மஇகாவுடன்
மலேசிய மக்கள் சக்தி கட்சி விவாதிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தெரிவித்தார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவை பெற்றுள்ளது.
இந்த 16 ஆண்டுகளில் பல சவால்களை கடந்து கட்சி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
மஇகாவுக்கு அடுத்து பெரிய இந்திய கட்சியாக மலேசிய மக்கள் சக்தி கட்சி விளங்குகிறது.
இருந்தாலும் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு மஇகாவுடன் இணைந்து செயல்பட கட்சி முடிவு செய்துள்ளது.
இதில் பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் சமுதாயத்திம் ஒற்றுமை தான் நமக்கு முக்கியம் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.