
ஈப்போ செப் 10-
நாட்டில் இன்று பழைய ரக கார்கள் அதாவது சுதந்திரத்திற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பழய ரக கார்களின் பயன்பாடு இன்று அதிகரித்து வருகிறது.
பலர் இந்த கார்களை தங்களின் இல்லங்கள் காட்சிப் பொருளாகவும் சிலர் சாலைகளில் இன்னமும் பயன்படுத்தி வருகிறார்கள்..
Old is gold என்பார்கள் அதுபோல பலரின் கவனத்தை ஈர்த்து வரும் பல ரகத்திலான பழைய ரக கார்களை இன்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
ஒரு சிலர் இந்த கார்களை சீரமைப்பு செய்து அதிக விலைக்கு விற்றும் வருகிறார்கள்
அந்த கார்களை வைத்துள்ள பலர் தொடர்புகளை வலுப்படுத்த பேரா மாநிலத்தில் பி.சி.டி . கிளைப் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாக அதன் அமைப்பாளர் டத்தோ சந்திரன் கூறினார்.

ஈப்போ ரோயல் கிளப்பின் விளையாட்டுப் பிரிவு தலைவர் ஜி. கேசவன் ஏற்பாட்டில் பி்.சி். டி. கிளப் ஆதரவுடன் அதன் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு ஈப்போ ரோயல் கிளப்பில் நடைபெற்றது.
அதில் தங்களின் பழய ரக கார்களுடன் பி்.சி். டி கிளப் கலந்துக் கொண்டனர்.
PERAK CLASSIC DRIVERS ( PCD) கிளப் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தாமும் , Dr.ஹரிதேவ், KT பிள்ளை துவான் சையத் ஆசம் & CK வோங் போன்ற சில கிளாசிக் கார் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது அதன் அமைப்பாளர்களில் ஒருவரான டத்தோ பி .ஆர் . சந்திரன் கூறினார்.
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் பழைய கார்களுக்கு தேவைப்படும் உபரி பாகங்களை எவ்வாறு பெறுவது மற்றும் இதர விஷயங்களைத் தெரிந்துக்கொள்ளவது என்றார்.