காளிதாஸ் சுப்ரமணியம்
புத்ராஜெயா: செப் 10-
இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு கிலோ மீட்டருக்கு தகுந்த கட்டணம் வழங்கப்படுவது இல்லை. இதனால் நாங்கள் ஏமாற்றப் படுகிறோம் என்று பாதிக்கப்பட்ட ஓட்டுநர் கள் குழுவிற்கு தலைமையேற்ற யாசின் இன்று தெரிவித்தார்.
நாட்டில் அதிகமானோர் இ-ஹெய்லிங் துறையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட இ-ஹெய்லிங் நிறுவனம் புதிய கட்டண முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
வாடிக்கையாளரை ஏற்றும் இடத்தில் இருந்து இறக்கும் இடத்திற்கு மட்டுமே தற்போது கட்டணம் விதிக்கப்படுகிறது.
ஆனால் ஓட்டுநர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வாடிக்கையாளர்களை ஏற்றும் இடத்திற்கான கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை என்று அவர் சொன்னார்.
இதனால் ஓட்டுநர்களுக்கு தான் நஷ்டம் ஏற்படுகிறது.
இதே போன்ற பல பிரச்சினைகளையும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் எதிர் நோக்கி வருகின்றனர்
இது போன்ற விதிகளால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அனைவரும் அடிமையாக்கப்பட்டு வருகிறோம் என்று அவர் சொன்னார்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சுக்கு நாங்கள் மகஜர் வழங்கியுள்ளோம் என்று அவர் சொன்னார்