கோலாலம்பூர்: செப் 10-
ஹலால் சான்றிதழ் பற்றிய விழிப்புணர்வை ஜாக்கிம் எந்தவித சுமையும் இன்றி மேற்கொள்ள வேண்டும் என்று
பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள ஹலால் சான்றிதழ் பிரச்சினை பற்றி பிரெஸ்மா அறிந்திருக்கிறது.
பன்றி இறைச்சி, மதுவை உட்படாத அனைத்து உணவகங்களுக்கும் ஹலால் சான்றிதழ் தேவை என்ற ஜாக்கிம் முன்மொழிவு மிகவும் வரவேற்கத்தக்கது.
ஆனால் அதற்கு இன்னும் ஆழமான, விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.
பெரிய மூலதனம் இல்லாத உணவக உரிமையாளர் இது ஒரு பிரச்சினையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனால் இதை கட்டாயமாக்குவதற்கு பதிலாக அவர்களுக்கு விழிப்புணர்வு, ஊக்குவிப்பு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.