செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் செப் 10-
ஹலால் சான்றிதழ் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்காக செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கிடம் இன்று புக்கிட் ஈமான் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுத் துறையின் இன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த
இன்று காலை 9.30 மணிக்கு மேல் புக்கிட் அமான் தலைமையகத்திற்கு அவர் தனது வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் மற்றும் ஷாரிசான். ஆகியோருடன் வந்தார்.
ஒன்றரை மணி நேரம் அவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
போலீஸ் விசாரணைக்கு திரேசா கோக் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக அவரின் வழக்கறிஞர் ஷாரிசான் நிருபர்களிடம் தெரிவித்தார்.
திரேசா கோக்கிற்கு ஆதரவு தெரிவிக்க ஜசெக தலைவர் லிம் குவான் எங், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின், செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கோக் வாய், புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் போங் குய் லான், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ், கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ், வழக்கறிஞர் சங்கிட் கோர் கர்ப்பால் சிங் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.