கோலாலம்பூர் செப் 11-
இந்திய சமுதாய பொருளாதார மேம்பாட்டிற்கு இணைந்து செயல்பட
டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் தலைமையில் தெக்குன் கடனுதவி அமைப்புடன் சரித்திரப்பூர்வமான நேரடி சந்திப்பு நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு தெக்குன் நேசனல் அமைப்பின் வாயிலாக கடன் வசதிகளை பெற்றுத் தருவதில், சிலாங்கூர் மாநில ம இ கா புதிய தளத்தினை உருவாக்கியிருப்பதாக மாநில ம.இ.கா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில
ம.இ.கா முக்கிய நிர்வாகக் குழுவிற்கு தலைமையேற்று தெக்குன் நேசனலின் தலைவர் டத்தோ அப்துல்லா சானியை தெக்குன் தலைமையகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பில் மாநில ம.இ.கா துணைத் தலைவர் ஶ்ரீதரன், செயலாளர் சசிதரன், துணைச் செயலாளர் ராஜமோகன் , பொருளாளர் டத்தோ AP சிவம், தகவல் அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளடங்கிய நிர்வாகிகள் இடம் பெற்றிருந்தனர்.
அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கியிருக்கும் 30 மில்லியன் நிதி ஒதுக்கீடோடு மேலும் இன்னுமொரு 30 மில்லியன் நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ அப்துல்லா சானி இச்சந்திப்பில் தெரிவித்தார்.
.
இந்த நிதி இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு கொண்டு செல்வதை சிலாங்கூர் ம.இ.கா தொடர்பு பாலமாக இருந்து செயல்படும் என்றார் டத்தோ சங்கர் ராஜ்.
இக்கடன் வசதி பற்றிய முழு தகவல்களை
மாநிலம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு,இந்தியர்களுக்கு விளக்கக் கூட்டங்களும் தேவையான வழிகாட்டல் உதவிகளும் வழங்கப்படும் என்று டத்தோ சங்கர் ராஜ் தெரிவித்தார்.
இதற்கான செயல் திட்டம் விரைவில் அமலாக்கம் காணும் என மாநில ம.இ.கா செயலாளர் சசிதரன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேல் விவரங்கள் அறிய
+60 19 367 0111
கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளும்படி மாநிலச் செயலாளர் சசிதரன்
கேட்டுக் கொண்டார்.