புதுடெல்லி: செப் 11-
பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சம், வெள்ளிக்கு ரூ.50 லட்சம், வெண்கலத்துக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
பாராலிம்பிக் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் நேற்றிரவு தாயகம் திரும்பினர்.
இந்தியா ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 29 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்