
நியூயார்க்: செப் 11-
அமெரிக்க அதிபருக்கு தகுதியான நபர் கமலா ஹாரிசே என்றும், அவர் தான் முக்கியமான தருணங்களில் சரியான முடிவு எடுப்பார் என்றும் டிரம்ப் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர் எனவும் முன்னாள் ராணுவ ஜெனரல்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தற்போது யார் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் ஆதரவை திரட்டி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ராணுவ ஜெனரல் லாரி எல்லீஸ், ரியல் அட்மிரல் மிக்கேல் சுமித் உள்ளிட்ட 10 பேர் ஒன்று சேர்ந்து கமலாவுக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.