
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் செப் 12-
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் பிரச்சனைக்கு இன்று நல்ல முறையில் தீர்வு பிறந்தது.
கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவிலுக்கு செந்தூல் சிவன் கோவில் வரிசையில் ஒதுக்கப்பட்ட புதிய நிலத்தில் தற்காலிகமாக புதிய கோவில் நிர்மாணிக்கப்படும்.
கோவிலுக்கு பக்தர்கள் வருகை தரும் வகையில் கோவில் முன் புறத்தில் புதிய பாலம் கட்டப்படும்.
மேலும் பக்தர்கள் வசதிக்கு ஏற்ப தற்காலிகமாக புதிய ஆலயம் கட்டப்படுகிறது என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன் தெரிவித்தார்.
புதிய கோவில் கட்டுவதற்கு அனைத்து உதவிகளும் வழங்குவேன் என்று அவர் சொன்னார்.
ம இகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் மற்றும் நானும் ஒன்றாக இணைந்து நாகம்மாள் கோவிலை நல்ல முறையில் கட்டித் தருகிறோம்.
எனது நாடாளுமன்ற உறுப்பினர் மானியத்தில் இருந்து இந்த கோவில் கட்டுமான பணிக்கு உதவுவேன் என்று அவர் சொன்னார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் பிரச்சனைக்கு தீர்வு பிறந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பிரபாகரன் தெரிவித்தார்.
இதனிடையே பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ல் மற்றும் எனது தலைமையில் இந்த கோவில் நல்ல முறையில் கட்டப்படும் என்பதோடு பிரபாகரன் தலைமையிலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று டத்தோ ஏ.கே இராமலிங்கம் தெரிவித்தார்.
இந்த கோவில் பிரச்சினைக்கு இன்று நல்ல முறையில் தீர்வு பிறந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டத்தோ இராமலிங்கம் தெரிவித்தார்.
மிக விரைவில் புதிய இடத்தில் கோவில் சிலைகள் இடம் மாற்றம் செய்யப்படும் என்று கோவில் செயலாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.
எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இனி கட்டுமான பணிகள் மின்னல் வேகத்தில் தொடரும் என்று அவர் சொன்னார்.
இன்று செந்தூல் மெட்ராஸ் கபே உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டத்தோ இராமலிங்கம், பிரபாகரன், ம இகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம், டத்தோ ராஜசேகரன் மற்றும் கோவில் செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.