ஈப்போ செப் 12-
ஆலயங்கள் பல சமய வளர்ச்சிக்கு மட்டும் செயலாற்றவில்லை மாறாக சமுக நல காரியங்களில் குறிப்பாக வசதி குறைந்த மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறது.
இந்த வகையில் சிம்மோர் நகரில் மார்கெட் அருகே பல ஆண்டுகளாக செயல் பட்டு வரும் ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தின் சமுக பணியை சிம்மோர் இந்திய சமுக நல அமைப்பின் தலைவர் எஸ். வாசு பாராட்டினார்.
பேரா , சிம்மோரில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய ஆண்டு திருவிழாவில் சிறப்பு வருகை புரிந்த அவர் இவ்வாறு பேசினார்
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
அதன் ஆலய நிர்வாகம் மற்றும் சிம்மோர் தமிழ் சங்க ஏற்பாடில் . அந்த விழாவில் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்காக புத்தகப்பை வழங்கியது.
ஆலயத் திருவிழாவில் மட்டும் அல்ல தீபாவளிக்கு வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள வழங்குவது, அன்னை, தந்தையர் தின விழாவிலும் , புத்தாண்டிலும் வசதி குறைந்தவர்களுக்கு ஆண்டு உதவிகள் செய்தி வருகிறது.
வசதி குறைந்த மக்களுக்கு அரசாங்கம் ஒரு புறம் உதவிகள வழங்கிய
வந்தாலும் ஆலயங்களும் இதுபோன்ற சமுக நல உதவிகள் வழங்குவது மேலும் அதிகமான வசதி குறைந்த மக்கள் நான்மையடைய வாய்ப்பு உள்ளது என்று வாசு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பேரா மாநில மருத்துவ. துறையைச் சேர்ந்த உதவி இயக்குனர் சிவநேசன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.