ஈப்போ செப் 11-
போதைப் பொருள் வைத்திருந்ததாக மரண தண்டனை வகை செய்யும் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய தந்தை, ஒரே குடும்பத்தைச் சேரந்த மூவர் இக்குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்
சிம்மோரில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் வைத்திருந்ததாக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் மரண தண்டனை வகை செய்யும் குற்றச்சாட்டை அம்மூவரும் எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த வழக்கில் கே.ஏகாம்பரம் ( வயது 57), இவரது மனைவி முத்துபால் லத்தா( வயது 55 ), இவர்களின் மகன் ஏ. லோகேஸ்வரன்( வயது 28 ) ஆகிய மூவருக்கு எதிராக குற்றவியல பிரிவு 39 பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது்
கடந்த 18-2-20 இல் காலை மணி 4.30 மணியளவில் ஜாலான் மங்கிஸ் , சிம்மோர் , பேராக் எனும் முகவரியில் உள்ள வீட்டில் 303.4 கிராம் எடையுள்ள மெத்தம்பெத்தமின் எனும் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில், இம்மூவரும் போதைப் பொருள் வைத்திருந்த்திற்கான போதிய ஆதாரத்தை நிருபிக்க தவறியதால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி மோசஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கான இரு தரப்பு வாதங்களை செவிமடுத்தப் பின்னர் நீதிபதி மோசஸ் சூசையன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை இன்று அறிவித்தார்.
இந்த வழக்கில் டி. பி. பி. யாக ஆர். புஷ்பராசி, குற்றம் சாட்டபட்டவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் சரன்சிங்,எஸ். மோகன் மற்றும் பரிஹா அர்ஷாட் ஆகியோர் ஆஜராயினர்..
இந்த தீரப்பை செவிமடுத்ததும குற்றவாளிகள கூண்டில் இருந்த அம்மூவரும மகிழ்ச்சி கண்ணீருடன் நீதிபதிக்கு நன்றி தெரிவிக்க கையெடுத்து கும்பிட்டனர்.