கோலாலம்பூர்,செப்11: பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும்
முன்னாள் மனிதவள அமைச்சருமான மாண்புமிகு வ.சிவகுமார் MyCEB எனப்படும் மலேசிய மாநாட்டு,கண்காட்சி செயலவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நனிச் சிறந்த சேவையை முன்னெடுத்து வரும் சிவகுமார் முன்னாள் துரோனோ சட்டமன்ற உறுப்பினராகவும் மலேசியாவின் முதல் இந்திய சபா நாயகாராவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கடந்த 2008ஆம் ஆண்டு பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் ஆவார்.
அரசியல் சார்ந்தும் மக்கள் சேவையில் திறன்மிக்க ஆளுமையும் மட்டுமின்றி விவேகமும் அவரது தனித்துவ ஆற்றல் மற்றும் பரந்த அனுபவமும் தான் அவர் இப்பதவிக்கு நியமிக்க மூலக்காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன் தலைமைத்துவ பண்பும் மாண்பும் கொண்டிருக்கும் சிவகுமார் இப்பதவியில் நியமிக்கப்பட்டத்தை பொது அமைப்புகளும் அரசியல் சார்ந்தும் பொது மக்களும் நிறைவாக வரவேற்று வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.
செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்று தொடங்கி அவரது இந்த நியமனம் அமலுக்கு வருகிறது.முன்னாள் மனிதவள அமைச்சராக பல்வேறு சேவையையும் திறன்மிக்க செயல்பாடுகளையும் மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஆற்றியுள்ள சிவகுமார் இந்த புதிய நியமனத்தின் கீழ் சிறந்த பங்களிப்பை ஆற்றுவார் என்பதில் துளியும் ஐயமில்லை.
சிவாலெனின்
ஊடகவியலாளர்-
தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்ற உறுப்பினர்.