
தாப்பா, செப். 12- உலு திராம் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட குற்றத்திற்காக துப்புரவுத் தொழிலாளிக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று ஏழு நாள் சிறைத் தண்டனையும் 800 வெள்ளி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
தனக்கெதிரான குற்றச்சாட்டை வான் அப்துல் கயூம் வான் முகமது ரட்சுவான் (வயது 25) என்ற அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அனிஸ் ஜைனப் பவான் தே இந்த தீர்ப்பை வழங்கினார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஏழு நாள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
கார்ப்ரல் அகமது அஸ்ஸா ஃபாஹ்மி அஸ்ஹார் (உலு திராம் காவல் நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அந்த நபர் குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா

