சென்னை: செப் 14-
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களின் உடலுக்குஅரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான 11 மாதத்தில் 192 பேரின் உடல்களிலிருந்து 1086 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பலரும் உடல் உறுப்பு தானம் செய்து வருகின்றனர். இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் இதற்கான ஆர்வம் அதிகரித்தே வருகிறது.