ஷா ஆலம், செப் 14- பள்ளி விடுமுறையை முன்னிட்டு ராஜா துன் உடா நூலகத்தில் நடைபெறும் மினி கார்னிவலில் ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் தொடர்பான வகுப்புகள் இடம்பெறும்.
செப்டம்பர் 14 முதல் 22 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அனைத்து நடவடிக்கைகளும் இலவசமாக வழங்கப்படுவதாகப் பிபிஏஎஸ் தெரிவித்துள்ளது.
“ஒரு சில விளையாட்டுக்ளுக்கு மட்டுமே RM2 குறைவான கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் பிபிஏஎஸ் இணையதளத்திற்குச் சென்று நடவடிக்கைகளின் அட்டவணையைப் பார்க்கலாம் மற்றும் பங்கேற்புப் பதிவை ராஜா துன் உடா நூலகத்தில் உள்ள நிரல் கவுண்டரில் மேற்கொள்ளலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.