


பூச்சோங், செப் 13-
பல்லின மக்களின் இதயக்குரலாக விளங்கி வரும் மைபிபிபி கட்சியின் தேசிய தலைவராக டத்தோ டாக்டர் லோகபாலா அண்மையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
செப்டம்பர் 1 ஆம் தேதி புத்ரா வாணிப மையத்தில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் 71 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் டத்தோ டாக்டர் லோகபாலா தேசிய தலைவராக தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் பூச்சோங் Bespoke உள்ள ஹோட்டலில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.
மைபிபிபி கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டத்தோ டாக்டர் லோகபாலாவுக்கு சிலாங்கூர் மாநில மைபிபிபி பக்கப் பலமாக இருந்து முழு ஆதரவை வழங்கும் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
கட்சியின் மேம்பாட்டை முன் வைத்து அவர் மேற்கொள்ளும் திட்டங்கள் வெற்றிபெற உறுதுணையாக இருப்போம் என்றார்
இந்த விழாவில் சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சி சார்பில் டத்தோ டாக்டர் லோகபாலாவுக்கு புத்தர் சிலை பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மைபிபிபி கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, தகவல் பிரிவுத் தலைவர் ஸ்டீபன், தகவல் பிரிவு துணை தலைவர் குமார் உட்பட சிலாங்கூர் மாநில மைபிபிபி தொகுதி தலைவர்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.