நியூயார்க்: செப் 13-
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுடனான மற்றொரு நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மூன்றாவது விவாதத்துக்கு கமலா ஹாரிஸ் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.இருப்பினும் அதில் பங்கேற்க மாட்டேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“வாக்காளர்களுக்காக மேலும் ஒரு விவாதம் மேற்கொள்ள வேண்டும்” என வியாழக்கிழமை அன்று சார்லோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இந்த சூழலில் தான் ட்ரம்ப் அதற்கு மறுத்து தெரிவித்துள்ளார்.
இருப்பினும் டொனால்ட் ட்ரம்ப் உடனான விவாதத்தில் வெற்றியாளர் கமலா ஹாரிஸ் தான் என்பதை பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது