டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு! காயமின்றி உயிர் தப்பியதாக பாதுகாப்புப்படை தகவல்!

வாஷிங்டன் : செப் 16-
அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தார்.

அப்போது மறைந்து இருந்த நபர் ஒருவர், ட்ரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

அதை அறிந்த பாதுகாப்புப் படை வீரர்கள், உடனடியாக ட்ரம்பை அருகில் இருந்த அறைக்குள் கொண்டு சென்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அமெரிக்க உளவுப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த துணை அதிபர் கமலா ஹாரீஸ், அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என்றும் ட்ரம்ப் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles