சென்னை: செப் 20-
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ்கனி எம்.பி., நேற்று தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரஹ்மான்.
கடந்த ஆக.19ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் அப்துல் ரஹ்மானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டது.
வக்பு வாரியத்தில் முஸ்லிம் எம்.பி., உறுப்பினர் பதவி காலியாக இருந்ததால், அதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் ராமநாதபுரம் எம்.பி-யான நவாஸ்கனி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, நேற்று அவர் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் தேர்வானார். பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன் பிறகு நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”வக்பு வாரிய அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் வக்பு வாரிய தலைவராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.
முக்கிய காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக முதல்வருக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கும், பரிந்துரைத்த தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.