
வாஷிங்டன் செப் 20-
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று பிறந்தநாள் .
இதனை முன்னிட்டு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
சுமார் ஒரு வார காலம் அவர்களது பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் சுமார் நூறு நாட்களை கடந்தும் பூமி திரும்பாமல் அவர்கள் அங்கேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.