
கூச்சிங், செப் 20– எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் புதிய முன்மொழிவுகள் அல்லது கருத்துகளை எதிர்க்கட்சிகள் சமர்ப்பிக்கலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.
தற்போதுள்ள வரைவு இந்த விவாதங்களுக்கு அடிப்படையாக அமையும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைக் கொறடாவாக இருக்கும் ஃபாடில்லா கூறினார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர எதிர்க்கட்சிகள் இன்றுவரை தனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாற்றத்தை விரும்பினால், எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்க வேண்டும்.
“முன்னர், அவர்கள் அதை நிராகரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். எனவே நாங்கள் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டோம்,” என்று அவர் சர்வதேச சமூக பாதுகாப்பு மேலாண்மை மாநாடு 2024 இன் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.