கோலாலம்பூர், செப். 20– நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ஓப்
குளோபல் நடவடிக்கையில் குளோபல் இக்வான் செர்விசஸ் அண்ட்
பிசினஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி,
அவரின் மனைவி மற்றும் அல்-அர்க்காம் இயக்கத்தின் முன்னாள்
தோற்றுநரின் மகன் உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அரச
மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியது.
புக்கிட் அமான் டி8 பிரிவு மற்றும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்
துறையின் டி14 பிரிவு ஆகியவை தலைநகர் புக்கிட் பிந்தாங், ஜாலான்
இம்பியில் உள்ள பெர்ஜெயா டைம் ஸ்குவெயர் ஏ டவரில் உள்ள நான்கு
குடியிருப்புகள் மீது அதிகாலை 5.40 மணிக்கு ஏக காலத்தில்
அதிடிச் சோதனையை மேற்கொண்டதாக தேசிய போலீஸ் படைத்
தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 25 முதல் 65 வயது வரையிலான 12
ஆண்கள் மற்றும் ஏழு பெண்களை உள்ளடக்கிய 19 பேரை தாங்கள் கைது
செய்ததாக அவர் சொன்னார்.