பினாங்கு மாநில இளைஞர் பிரிவின் தலைவர் ரூபராஜ்ஜின் அதிரடி முயற்சி !
பினாங்கு மாநில இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் “மஇகாவை நோக்கி இளைஞர்கள் பிரவேசம்” எனும் நிகழ்வு செபராங் ஜெயாவில் நடந்தது.
கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் விதமாக 250 இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதுவரை சுமார் 300 விண்ணப்ப பாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகப் பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் ரூபராஜ் தாமோதிரன் தெரிவித்தார்.
ம.இ.காவில் இளைஞர்கள் இணைவது கட்சிக்குக் கூடுதல் வலு சேர்க்கும் . இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். அந்த வகையில் இளைஞர்களின் தேர்வு ம.இ.காவாக இருக்க வேண்டும் என்பது கட்சியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் ஆகியோரின் எண்ணங்களாகும்
தலைமை எங்களுக்குக் கொடுத்த வாய்ப்பையும் பொறுப்பையும் கொண்டு இளைஞர்களை ம.இ.காவில் இணைக்க சில நடவடிக்கையை மாநில இளைஞர் அணி செய்து வருகிறது. எங்களுக்குப் பக்கபலமாக ம.இ.கா இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் இருக்கிறார் என்றார் ரூபராஜ்.
மாநில இளைஞர் அணி, மூன்று விவகாரங்களைத் தொட்டு தனது நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது. அவை கல்வி , இளைஞர்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் என்றார் ரூபராஜ்.