
கோலாலம்பூர், செப் 23: அரசு மற்றும் தனியார் உயர்கல்வி கூடங்களில்
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் B40 மாணவர்கள் மித்ரா 4.0
நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
இந்த நிதி உதவிக்கு
டிப்ளோமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மீது உயர்கல்வி கூடங்களில்
கட்டொழுங்கு தொடர்பான புகார்கள் ஏதும் இருக்கக்கூடாது மற்றும் கட்டாயம்
அவர்கள் பிஎஸ்என் வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டும்.
இந்த உதவிக்கான விண்ணப்பம் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை
திறந்திருக்கும். இந்த நிதி உதவிக்கான விண்ணப்பப் பாரத்தை https://rb.gy/baxg3n என்ற இணையத்தளத்தில் பெறலாம்.
இந்த உதவிக்கு விண்ணப்பிக்க அடையாள அட்டை நகல், பிறப்பு பத்திர நகல்,
பெற்றோர்களில் ஊதிய சரிபார்ப்பு, உயர்கல்வி கூடங்களின் நுழைவு கடிதம்
மற்றும் பிஎஸ்என் வங்கி எண் போன்ற ஆவணங்கள் தேவை.
கூடுதல் தகவல்களுக்கு https://shorturl.at/dOeDy என்ற இணைப்பில் உள்ள
வழக்காட்டி தொகுப்பை நாடலாம்.
அதுமட்டுமில்லாமல், 03-8886 6192 / 6082
என்ற எண்கள் மூலம் மித்ரா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது
thevamalar@mitra.gov.my, ktk_sivasritaran@mitra.gov.my ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.