மா.பவளச்செல்வன்
புத்ரா ஜெயா, செப் 23-
இந்திய சமுதாயத்தின் நலன்கள் மற்றும் உருமாற்றம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் இன்று சிலாங்கூர், விலாயா மற்றும் ஜொகூர் மாநில கெஅடிலான் தொகுதி இந்தியத் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பை நடத்தினார்.
பிரதமர் துறை அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கெஅடிலான் கட்சியின் துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் முக்கிய தலைவராக கலந்து கொண்டார்.
புக்கிட் மெலவாத்தி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம், பாங்கி தொகுதி தலைவரும் கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பாலமுரளி, பூச்சோங் தொகுதி தலைவர் அன்பரசன், சுபாங் தொகுதி தலைவர் டாக்டர் பிரவின் முரளி, கோலலங்காட் தொகுதி ஹரிதாஸ், கெப்போங் தொகுதி தலைவர் ஜெயக்குமார், செபூத்தோ தொகுதி தலைவர் அனிதா, ஜொகூர் உலுதிராம் தொகுதி தலைவர் மாண்புமிகு கோபாலகிருஷ்ணன், ஜொகூர் சுப்ரமணியம் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
தமக்கு எதிராக டிக்டோக் மற்றும் சில ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டாலும் நான் என் வேலையை செய்து கொண்டிருப்பதாக சண்முகம் முக்கண் தெரிவித்தார்.
இதனிடையே இந்த சந்திப்பில் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து டாக்டர் சத்யா பிரகாஷ் எடுத்துரைத்தார்.
கவனிக்கப்பட வேண்டிய ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் விளங்குகிறது
ஆகவே இந்தியர்களின் நலன்களுக்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தொகுதி தலைவர்கள் ஆணித்தரமாக எடுத்துரைத்தனர்.