புத்ராஜெயா, செப். 24 தொடக்கப் பள்ளி அடைவு நிலை மதிப்பீட்டு தேர்வு (யு.பி.எஸ்.ஆர்.) மற்றும் மூன்றாம் ஆண்டு மதிப்பீட்டு தேர்வு (பி.டி.3) ஆகியவற்றை மீண்டும் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தை ஒரு கோணத்தில் மட்டும் அல்லாமல் விரிவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என கல்வியமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இவ்விரு தேர்வுகளையும் அகற்றுவது தொடர்பில் ஏற்கனவே எடுத்த முடிவில் கல்வியமைச்சு தற்போதைக்கு உறுதியாக உள்ளது என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.
.
கடந்த 2022ஆம் ஆண்டு அகற்றப்பட்ட அவ்விரு தேர்வுகளையும் கல்வியமைச்சு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கை தொடர்பில் அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.
இவ்விரு தேர்வுகளும் இல்லாத காரணத்தால் கல்வியை பாதியில் கைவிடும் எஸ்.பி.எம். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
bernama