புத்ராஜெயா, செப் 24-
ஒப் குளோபல் மூலம் மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட குழந்தைகளில் கல்வி பொறுப்பை அக்டோபர் 1 முதல் கல்வி அமைச்சகம் ஏற்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
இதற்கு முன் எந்த முறையான கல்வியும் பெறாத அக்குழந்தைகளுக்கு சிறப்பு பாட தொகுதி பயன்படுத்தப்படும்.
“கல்வி நடவடிக்கை அவர்களின் தற்போதைய தங்குமிடத்தில் நடைபெறும்.
தற்போது அவர்கள் 3M (படித்தல், எழுதுதல், எண்கள்) மற்றும் உளவியல் சமூக அம்சங்கள் உட்பட பல மதிப்பீடுகளை மேற்கொள்கின்றனர்.
“அனைத்து அமர்வுகளும் முடிந்ததும், கல்வி அமைச்சு பொறுப்பேற்கும்,” என்று அவர் இன்று நடைபெற்ற கல்வி அமைச்சின் மாதாந்திர சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிறப்புத் தொகுதியின் அடிப்படையிலான கல்வி மழலையர் பள்ளி, ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி என மூன்று பிரிவுகளைப் பின்பற்றுகிறது என்று அமைச்சர் ஃபட்லினா கூறினார்.
– பெர்னாமா