குளோபல் இக்வான் நிறுவன வளாகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்!எம்.பி.எஸ். அறிவிப்பு

செலாயாங், செப். 24– குளோபல் இக்வான் செர்விசஸ் அண்ட் பிசினஸ்
ஹோல்டிங் (ஜி.ஐ.எஸ்.பி.எச்.) நிறுவன வர்த்தக வளாகங்கள் மீதான
அமலாக்க நடவடிக்கைகளை தாங்கள் வலுப்படுத்வுள்ளதோடு அவற்றை
தங்கள் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரவுள்ளதாக செலாயாங்
நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்) கூறியது.

ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாதது
கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அந்த வளாகங்ளுக்கு சீல் வைப்பது
உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செலாயாங் நகராண்மை
கழகத் தலைவர் அடி பைசால் அகமது கூறினார்.

கடந்த வாரம் காவல் துறையுடன் இணைந்து அமலாக்க நடவடிக்கையை
நாங்கள் மேற்கொண்டோம்.

அதில் லைசென்ஸ் இல்லாத வளாகங்களை
மூடுவது, பறிமுதல் செய்வது மற்றும் குற்றங்களுக்கு அபராதம் விதிப்பது
ஆகிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

இந்த நடவடிக்கை குளோபல் இக்வான் நிறுவனம் சம்பந்தப்பட்டது மட்டும்
அல்ல. எம்.பி.எஸ். நிர்ணயித்த விதிமுறைகளை மீறும் செலாயாங்
நகராண்மைக் கழக அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள
அனைத்து வர்த்தகர்களுக்கும் விடுகப்படும் எச்சரிக்கையாகவும் இது
விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

Selangor kini

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles