சென்னை: செப் 24-
பூமியை கடந்து செல்ல உள்ள விண்கல் ஒன்று தற்காலிகமாக, ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு நிலவாக மாறும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது எப்போது நடக்கும் என்பது குறித்தும் அவர்கள விளக்கியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கல் ஒன்று, பூமியின் நிலவாகவே மாற இருப்பதாக கூறியுள்ளனர்.
கடந்த ஆக.7ஆம் தேதி நாசாவின், ‘ஆஸ்டிராய்ட் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ எனும் வானியல் அமைப்பு மூலம் 2024 PT5 எனும் விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இது பெரிசு ஒன்றும் கிடையாது. வெறும் 33 அடி நீளம் மட்டுமே இருக்கிறது.
செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை, இரண்டு மாதங்கள் வரை மட்டுமே இந்த விண்கல், பூமியின் நிலவாக சுற்றி வரும்.
அதன் பின்னர் அது தன்னுடைய பாதையை நோக்கி மீண்டும் தள்ளப்பட்டு நகர்ந்து போய்விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதை வெறும் கண்களால் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.