குளுவாங், செப் 24-
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அம்னோ உதவித் தலைவர் மற்றும் தோட்டத் தொழில் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கூறினர்.
தேசிய முன்னணியின் அயராது உழைப்பு காரணமாக இந்த சட்டமன்ற தொகுதியில் வெற்றிப்பெறுவது என்பது நிச்சயமாகும் என்று அவர் தெரிவித்தார்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் யாவரும் தேசிய முன்னணிக்குத் தங்களின் ஆதரவினைப் புலப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
பெர்னாமா