
பெய்ரூட்: செப் 25-
ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது.
போர் பதற்றத்தால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை நெருங்கும் நிலையில், இஸ்ரேல் – லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த 17ஆம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் 37 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.