பெய்ரூட்: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியது. 10 மாதங்களை கடந்து நீடித்து வரும் போரில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் எடுக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாவினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இஸ்ரேலின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டெல் அவிவ் மீது தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீதி ஹிஸ்புல்லா நேற்று தாக்கியது.
மேலும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் தலைமையகம் மீது கார்டர்-1 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது இதுவே முதல்முறை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
reuters