![](https://thinathanthi.my/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-09-26-at-09.19.48-1024x512.jpg)
கிள்ளான், செப். 26- கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.)
ஏற்பாட்டில் இங்குள்ள லிட்டில் இந்தியாவில் நடைபெற இருக்கும் தீபாவளி சந்தையை முன்னிட்டு குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு செய்யும் பணி இன்று செப்டம்பர் 26ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
மாலை 3.00 மணிக்கு தொடங்கும் இந்த குலுக்கல் முறையிலான தேர்வு கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் முகநூல் மற்றும் யுடியூப் காணொளி வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு பண்டிகை தொடர்பான பொருட்களை விற்பதற்கு 52 கடைகளும் பட்டாசுகள் விற்பதற்கு 16 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகர் மன்றம் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வியாழக்கிழமை
கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர்
17 முதல் 30 வரை லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி சந்தைக்கு
எம்.பி.டி.கே. ஏற்பாடு செய்துள்ளது.
கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டப் பின்னர் அக்டேபார் 17 தொடங்கி இரு வாரங்களுக்கு வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்