மாஸ்கோ :செப் 26-
ரஷ்யாவின் நகரங்கள் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் குரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் வீசினால் அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் முடிவை ரஷ்யா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடி தரும் வகையில் அணு குண்டுகளை விசுவோம் என்று ரஷ்யா அதிபர் புதின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ராய்ட்டர்