ஷா ஆலம், செப். 26 – பத்து முதல் 12 வயது சிறார்களை பிரம்பால்
அடித்துக் காயப்படுத்திய குற்றத்திற்காக ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ்
நிறுவன உறுப்பினர் ஒருவருக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில்
இன்று பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிபதி நோரிடா ஆடாம் முன்னிலையில் ஆஜரான பாருள்ரஹிம் ஹிஷாம்
(வயது 23) என்ற அந்த நபருக்கு எதிராக 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின்
31(1)(ஏ) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டதாக
மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின்
31(1)(ஏ) பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று தேசிய
போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் நேற்று
கூறியிருந்தார்.
பல சிறார்கள் துன்புறுத்தப்படுவதைச் சித்தரிக்கும் காணொளி சமூக
ஊடங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் காவல்
துறையினர் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி விசாணையைத் தொடக்கினர்.
அச்சிறார்கள் வலியால் துடித்துக் கொண்டு ஆடவர் ஒருவரின்
கேள்விகளுக்கு பதிலளிக்கும் காட்சி அந்த காணொளியில் இடம்
பெற்றிருந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட
அச்சிறார்களை போலீசார் வெற்றிகரமாக மீட்டனர்.